
மு.தளையசிங்கத்தின் 'மெய்யுள்": காலவெளி கடந்த கருத்துநிலைகள் பற்றிய ஒரு மறுவாசிப்பு இ.இராஜேஸ்கண்ணன் தமக்கென ஒரு படைப்பாக்கக் கொள்கையினையோ அல்லது கருத்துநிலையினையோ வரித்துக்கொள்ளாது படைப்பாளிகள் இயங்குவது சாத்தியம் குறைந்தது. தமக்குள் ஒத்த கருத்துநிலை உடையவர்கள் ஓர் இயக்கமாக தொழிற்பட விளைகின்றனர். முரண்பட்ட கருத்துநிலையுடைய தனிமனிதர்களோ குழுக்களோ தாம் நம்பாத அல்லது நம்பமறுக்கின்ற எதிர்க்கருத்துநிலையினை விமர்சிப்பதும், சாடுவதும், மறுதலிப்பதும் இயல்பானதே. இலக்கியத்துறையில் தம்முள் வேறுபட்ட கொள்கைகளாலும் கருத்துநிலைகளாலும் முரண்படுபவர்கள் தங்கள் முரண்பாட்டினை ஆரோக்கியமான வழியில் வளர்த்துச் செல்வதன்...